×
 

தொகுதி மறு வரையறை..! கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி..! மக்களவையில் கனிமொழி வாதம்..!

தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் கனிமொழி எம்பி உரையாற்றினார்.

நாடாளுமன்ற மக்களவையில் எம்பி கனிமொழி உரையாற்றி உள்ளார். அப்போது பேசிய அவர் 8 கோடி மக்களின் குரலாக தான் பேசுகிறேன் என்று தெரிவித்தார். தொகுதி மறு வரையறை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது உரையை நிகழ்த்தினார்.

ஐந்து மாநில தேர்தல் பணிகளை குறைக்கவே அவசர அவசரமாக மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் தொகுதி மறு வரையறை மசோதா கூட்டாட்சி சிதைக்கும் முயற்சி என்றும் தெரிவித்தார். மத்திய அரசின் குரலை ஏற்று தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக நேற்று அரசுகளில் வெளியிடப்பட்டது ஏன் என்று கேட்டுள்ளார்.

நாடாளுமன்ற விவாதம் நடக்கும்போதே அரசிதழில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டுள்ளார். உள்துறை அமைச்சர் சொல்வது ஒன்று., மசோதாவில் இருப்பது ஒன்று எனவும் தெரிவித்தார். ஐந்து மாநில தேர்தல் பணிகளை குறைக்கவே அவசர அவசரமாக மசோதாக்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். 50% உயர்வு என்ற அடிப்படையில் தொகுதி மறுவ வரையறை என்று அமித் ஷா கூறுவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக இல்ல அமித்ஷா திமுக... எடப்பாடி பழனிசாமியை விளாசிய கனிமொழி...!

ஆனால், கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை என மசோதா கூறுவதாக தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று தெரிவித்தார். எம்பிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் நாடாளுமன்றத்தில் பேசக்கூட நேரம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சரின் பரிந்துரையை தொகுதி மறு வரையறை குழு ஏற்காவிட்டால் என்ன நடக்கும் என்றும் கேட்டுள்ளார். 

இதையும் படிங்க: இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share