இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!
எடப்பாடி பழனிச்சாமி எந்த திட்டத்தை சுயமாக செயல்படுத்தினார் என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு தொகுதிகளுக்கு சென்று வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் மற்றும் கூட்டணி கட்சி சின்னங்களுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் திமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறியும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் சுப்ரமணியன் ஆதரித்து கங்கைகொண்டான் பகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எட்டாயிரம் ரூபாய் கூப்பன் மற்றும் உரிமை தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டது உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதிகளை எடுத்து கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மாதம்தோறும் 1.13 கோடி உரிமை தொகை வழங்கி வரும் அரசு திராவிட மாடல் அரசு என்று குறிப்பிட்டுள்ளார். மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கான நிதியை வழங்குவோம் என மத்திய அரசு மிரட்டுவதாக தெரிவித்தார். தமிழகப் பிள்ளைகளின் கல்வியை பறிக்க முயற்சிக்கும் பாஜகவுடன் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மெட்ரோ திட்டத்தை நிறுத்தினார்களா..? அமைச்சர்கள் மன்னிப்பு கேட்கணும்..! அண்ணாமலை காட்டம்..!
தமிழ்நாட்டை மிரட்டி தமிழர்கள் மீது ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாக கனிமொழி குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டிற்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் சுயமாக எந்த திட்டத்தை அவர் செயல்படுத்தினார் எனவும் கேள்வி எழுப்பினார். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டினோம் என்கிறார்கள் என்றும் அதில் 51% நிதியை கொடுத்தது தமிழக அரசு தான் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "உங்க பையன் துரைமுருகன்"..! 11 முறை ஜெயிச்ச பெருமை கிடைக்கும்..! காட்பாடியில் பரப்புரை..!!