மெட்ரோ திட்டத்தை நிறுத்தினார்களா..? அமைச்சர்கள் மன்னிப்பு கேட்கணும்..! அண்ணாமலை காட்டம்..!
மதுரை மெட்ரோ விவகாரத்தில் திமுக அமைச்சர்கள் பொய் சொல்வதாக அண்ணாமலை தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் விவகாரத்தில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பொய் சொல்வதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர்கள் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீங்கள் கேட்டீர்கள் என்றால் அந்த கடிதத்தை வெளியிடுங்கள் என கேட்டுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மெட்ரோ ரயில் விவகாரத்தில் அமைச்சர்கள் பி டி ஆர் மற்றும் மூர்த்தி பொய் சொல்கின்றனர் என்றும் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவதை தாங்கள் தடுத்து விட்டதாக அமைச்சர்கள் பி டி ஆர் மற்றும் மூர்த்தி ஆகியோர் பொய் சொல்வதாகவும் குறிப்பிட்டார். மதுரைக்கு உண்மையிலேயே மெட்ரோ ரயில் திட்டத்தை கேட்டிருப்பீர்கள் என்றால் அந்த கடிதத்தை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: முத்துராமலிங்க தேவருடன் அண்ணாமலையை ஒப்பிட்ட செல்லூர் ராஜு.! கடும் எதிர்ப்பு..!!
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் புதிய திட்ட அறிக்கையை அனுப்பி மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை பெற்று தருவோம் எனவும் தெரிவித்துள்ளார். உள்ளூர் சந்தையில் விலை போகாத திராவிட மாடல அரசு வெளியூர் சந்தையில் எப்படி விலை போகும் எனவும் கேள்வி எழுப்பினார். தமிழக சட்டமன்ற தேர்தல் தற்போது இரண்டு முனை போட்டியாக மாறி வருகிறது எனவும் அண்ணாமலை பேட்டியளித்தார்.
இதையும் படிங்க: ஏய் லூசு... நீ எனக்கு ஓட்டு போட வேண்டாம்! கேள்வி கேட்டவரை திட்டிய திமுக எம்.எல்.ஏ கதிரவன்!