×
 

பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி..! கூச்சமே இல்லாம காலில் விழுவாங்க..! அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்.!!

பாஜகவும் திமுகவும் நேரடி கூட்டணியில் இருப்பதாக அமைத்து நிர்மல் குமார் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாஜகவும் திமுகவும் நேரடி கூட்டணியில் இருப்பதாக தெரிவித்தார். வழக்குகளில் இருந்து வெளிவருவதற்காக பாஜாக உடன் நேரடியாக திமுக கூட்டணி வைக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

சொத்துகளை குடும்பத்தை காப்பதற்காக பாஜகவுடன் நேரடியாக கூட்டணி வைக்க திமுக முயற்சிப்பதாக தெரிவித்தார். தொகுதி மறு வரையறை வாக்கெடுப்பில் எதிராக வாக்களிப்பார்களா இல்லையா என திமுக இதுவரை சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டார். அனைத்திற்கும் ஆதாரம் உள்ளதால் கொஞ்சம் காலம் தள்ளிப் போகலாம் ஆனால் வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியாது என்று தெரிவித்தார்.

கட்சி நிதி எல்லாமே அரசுக்கான நிதியாக மாறி இருப்பதாகவும் 15000 கோடி ரூபாய் வருவாய் என்றும் அமைச்சர்கள் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தேநீர் விருந்துக்கு செல்லவில்லை என கனிமொழி கூறுவது நம்பும்படியாக இல்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தேநீர் விருந்து நடைபெறும் என கனிமொழிக்கு தெரியாமலா அங்கு சென்றார் என்றும் சீட் மாற்றம் குறித்து அந்த நாளில் தான் பேச வேண்டுமா எனவும் கேட்டிருந்தார்.

இதையும் படிங்க: “தமிழர்களுக்கு அநீதி”..! தொகுதி மறுவரையறைக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்..!

பிரச்சனை வரும்போது எல்லாம் திமுகவினர் கூச்சமே இல்லாமல் டெல்லியில் சென்று காலில் விழுவார்கள் என்று அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம் செய்துள்ளார். கடந்த ஆட்சியில் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தாலும் அதற்குப்பின் குடும்பத்தினருடன் ஒரு ஒப்பந்தம் நடந்ததாக தெரிவித்தார். ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் யாரை சந்தித்தாலும் அது நேரடியாகவே இருக்கும் என்று குறிப்பிட்டார். 

இதையும் படிங்க: ‘கட்சி தாவல் வல்லுநர்’ வருத்தம் தெரிவிச்சே ஆகணும்..!! நிர்மல்குமார் மீது ரகுபதி காரசார தாக்கு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share