“தமிழர்களுக்கு அநீதி”..! தொகுதி மறுவரையறைக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்..!
தொகுதி மறுவரையறை தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் கருத்து தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை என்பது இந்தியாவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளையும் எண்ணிக்கையையும் மக்கள் தொகையின் அடிப்படையில் மீண்டும் நிர்ணயிக்கும் செயல்முறை. இந்திய அரசியலமைப்பின்படி ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின்னரும் இது மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் 1970களில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொகுதிகளின் எண்ணிக்கை 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் உறையவைக்கப்பட்டது.
பின்னர் 2000ஆம் ஆண்டில் மேலும் நீட்டிக்கப்பட்டு 2026 வரை இந்த உறை நிலை தொடர்ந்தது. இப்போது அந்தக் காலம் முடிவடையும் நிலையில் புதிய மக்கள் தொகை தரவுகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. தமிழ்நாட்டின் எதிர்ப்புக்கான முதன்மையான காரணம் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துவிடும் என்பதே. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்தி மக்கள் தொகை வளர்ச்சியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளன.
இதனால் அவற்றின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் வட மாநிலங்களை விட மிகவும் குறைவாக உள்ளது. இந்நிலையில் தற்போதைய அல்லது வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்தால் வட மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான தொகுதிகள் கிடைக்கும். உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தொகுதிகள் பெருமளவில் அதிகரிக்கும் அதே வேளையில் தமிழ்நாட்டின் தொகுதிகள் ஒப்பீட்டளவில் குறையும் அல்லது குறைந்த அளவே அதிகரிக்கும். இதனால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும். தற்போது 39 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டின் பங்கு சுமார் 7.18 சதவீதமாக உள்ளது. இது குறைந்தால் மாநிலத்தின் குரல் பலவீனமடையும். இதனால் தமிழகத்தில் தொகுதி மறுவரையறையை எதிர்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘கட்சி தாவல் வல்லுநர்’ வருத்தம் தெரிவிச்சே ஆகணும்..!! நிர்மல்குமார் மீது ரகுபதி காரசார தாக்கு..!!
தொகுதி மறு வரையறை தொடர்பாக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் கருத்து தெரிவித்தார். தொகுதி மறு வரையறை என்பது தமிழர்களுக்கு இடைக்கப்படும் அநீதி என்றும் அது தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை எனவும் தெரிவித்தார். தொகுதி மறு வரையறையை புற வழியாக கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ஏன் இந்த அவசர மனு..?? டி.கே சிவக்குமாரை இணைத்து திமுகவை விமர்சித்த அமைச்சர் நிர்மல் குமார்..!!