பேருந்தில் இருந்து தள்ளப்பட்ட மாணவிகள்..! வெட்கி தலை குனியனும்..!! கனிமொழி MP கண்டனம்.!
புதுக்கோட்டையில் பள்ளி மாணவிகள் கீழே தள்ளப்படும் விவகாரத்திற்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அருகே நடந்த இந்த சம்பவம் இன்று காலை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரங்கம்மாள் சத்திரம் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மாணவிகள் பள்ளிக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறினர். கீரனூர் பகுதியிலிருந்து புதுக்கோட்டையில் உள்ள வெவ்வேறு பள்ளிகளுக்குச் செல்லும் இந்த மாணவிகள், எண் 8 கொண்ட நகரப் பேருந்தில் ஏறியிருந்தனர். சுமார் பத்து முதல் பதினொரு மாணவிகள் வரை அந்தப் பேருந்தில் ஏறியிருந்தனர்.
பேருந்து சற்று தூரம் சென்றதும் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி நடத்துநர் மாணவிகளை இறங்கச் சொன்னார். மாணவிகள் பள்ளிக்குத் தாமதமாகிவிடும் என்று கூறி இறங்க மறுத்தனர். அப்போது நடத்துநர் பேருந்தின் கதவைத் திறந்து ஒரு மாணவியைத் தள்ளிவிட்டதாக மாணவிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து நின்றிருந்த மற்ற மாணவிகளும் ஒருவர் பின் ஒருவராகக் கீழே விழுந்தனர். இந்தச் சம்பவத்தில் எட்டு மாணவிகள் கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் காயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை அருகே நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளி செல்லும் பழங்குடியின மாணவிகள் அரசு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் மனிதநேயம் அற்ற கொடூரச் செயல் என்று அவர் குறிப்பிட்டார்.பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி நடத்துநரும் ஓட்டுநரும் மாணவிகளை இறக்கிவிட முயன்றனர். மறுத்த மாணவிகளை கீழே தள்ளிவிட்டது மிகவும் வன்முறையான செயல் என்று கனிமொழி தெரிவித்தார்.
இதையும் படிங்க: தளபதி தான் அடுத்த பிரதமர்..! ராகுலே அமர வைப்பார்.!! அடித்து கூறும் எம்எல்ஏ கனிமொழி..!
கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு சாதி என்னும் மனநோயால் சமூகம் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம் என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார். உரிய விசாரணை நடத்தி இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது எந்தவித சமரசமுமின்றி உடனடியாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: "மன்மத நன்றி"..! இதுக்கு END- ஏ இல்லையா.? கள்ளக்குறிச்சி MLA பேச்சால் அரண்டுப்போன கனிமொழி..!