கண்ணதாசன் படைப்புகள் "பொக்கிஷங்கள்"..! முதல்வர் விஜய் புகழாரம்..!
கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் விஜய் புகழாரம் சூட்டினார்.
தமிழ் இலக்கிய உலகின் மகத்தான கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளான இன்று தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பான மரியாதை செலுத்தப்பட்டது. முதல்வர் விஜய் கவியரசு கண்ணதாசனுக்கு புகழாரம் சூட்டினார். 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சிறுகூடல்பட்டியில் பிறந்த கண்ணதாசன், தமிழ் மொழியின் செல்வச் செழிப்பை தன் பாடல்கள் மூலம் உலகெங்கும் பரப்பிய மாபெரும் ஆளுமை. அவரது நூற்றாண்டு நெருங்கும் இந்த காலகட்டத்தில், அவரது பங்களிப்பை நினைவுகூரும் வகையில் முதல்வர் விஜய் புகழ்ந்துள்ளது, தமிழ் பண்பாட்டின் தொடர்ச்சியான மரியாதையை பிரதிபலிக்கிறது.
கண்ணதாசன் தன் வாழ்நாளில் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்கள், கவிதைகள் மற்றும் படைப்புகள் தமிழ் சமூகத்தின் உணர்வுகளை, தத்துவங்களை மற்றும் வாழ்க்கைப் பாடங்களை எளிய மக்களுக்கு கொண்டு சென்றன. இந்த ஆண்டு சபாநாயகர் மற்றும் அமைச்சர்களின் பங்கேற்பு, புதிய அரசின் கீழ் பண்பாட்டு மரபுகளைத் தொடர்ந்து போற்றும் உறுதியை காட்டுகிறது.
கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் விஜய் புகழாரம் சூட்டி இருக்கிறார். தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்த் திரையிசை வரலாற்றிலும் தனி முத்திரை பதித்து நூற்றாண்டு காணும் கவியரசு கண்ணதாசனுக்கு எனது புகழ் வணக்கங்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நாடே திணறிக்கிட்டு இருக்கும் போது இது தேவையா விஜய்?... தவெக அரசை எச்சரித்த அன்புமணி...!
மனித வாழ்வின் உணர்வுகளையும், தத்துவச் சிந்தனைகளையும், சமூக விழிப்புணர்வையும் தனது படைப்புகளின் மூலம் எளிய தமிழில் தந்து அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன் என்றும் கூறினார். காலங்களைக் கடந்தும் தலைமுறைகளை வழிநடத்தும் இலக்கியப் பொக்கிஷங்களாக அவரது படைப்புகள் புகழ்வதாக தெரிவித்தார். தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின் புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் என்றும் உறுதிப்பட முதல்வர் விஜய் கூறினார்.
இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியை பார்த்ததும் சட்டென CM விஜய் செயல்..! பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில் நடந்த சம்பவம்..!!