குமரியில் சினிமாவை மிஞ்சிய பயங்கரம்..! லவ் டார்ச்சரால் இளம் பெண் தற்கொலை.! பழித்தீர்த்த உறவினர்கள்..!!
கன்னியாகுமரியில் லவ் டார்ச்சரால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை உறவினர்கள் கொன்றனர்.
கன்னியாகுமரியில் சினிமா காட்சியை மிஞ்சிய பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் ராணுவ வீரரின் மென் பொறியாளரான மகளுக்கு லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞன். புகார் கொடுத்து சிறையில் இருந்து வந்த இளைஞன் மீண்டும் லவ் டார்ச்சர்.கடும் மன உளச்சலில் வீட்டில் தூக்கு போட்டு பெண் தற்கொலை செய்தார்.
ஆத்திரத்தில் லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞன் தற்கொலை செய்த பெண்ணின் உறவினர்கள் பிடித்து வந்து பெண்ணின் வீட்டில் வைத்து கற்கள் மற்றும் கம்புகள் கொண்டு அடித்தே கொலை செய்தார்கள். குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே பெரியவிளை பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும் தற்பொழுது ஆட்டோ ஓட்டுநருமான அழகேசன் என்பவருக்கு நான்கு பெண்கள் உள்ளது. இந்நிலையில் மூத்த பெண்ணான ஏஞ்சல். நாகர்கோயில் மென்பொறியாளராக பணியிற்றி வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியில் வசித்துவரும் ஆண்டனி என்பவர் தன்னை காதலிக்க கூறி லவ் டார்ச்சார் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது தொடார்பாக அழகேசன் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்து கடந்த ஐந்தாம் மாதாம் ஆன்டனியை கன்னியாகுமரி காவல் நிலைய போலிஸார் கைது செய்துள்ளார். இருந்த போதிலும் வெளியே வந்த ஆண்டனி தொடர்ந்து ஏஞ்சலுக்கு தொந்திரவு கொடுத்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!
இதனால் கடும் மன உளச்சல் அடைந்த ஏஞ்சல் இன்று தனது வீட்டில் வைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஏஞசலின் உறவினர்கள் ஆண்டனியை பிடித்து வந்து ஏஞ்சலின் வீட்டின் உள்ளே வைத்து கற்களாலும் கம்புகளாலும் அடித்தே கொலை செய்தார்கள்.இந்த தகவல் அறிந்து வந்த கன்னியாகுமரி காவல் நிலைய போலிஸார் இருவர் உடல்களையும் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் பெருவிளை பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!