வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!
வழக்கறிஞரை சரமாரியாக வெட்டிய சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
காட்டுமன்னார்கோவிலில் நடைப்பயிற்சி மேற்கொண்ட வழக்கறிஞரை சரமாரி வெட்டி விட்டு தப்பி சென்ற 4 பேர் கொண்ட மர்ம கும்பல் போலீசார் தீவிர விசாரணை.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்க விக்ரமன் இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார், மேலும் மக்கள் நீதி மையக் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டவர்.
இந்த நிலையில் இன்று காலை செட்டி தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து நிறுத்திவிட்டு நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார் அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!
ரத்த வெள்ளத்தில் சரிந்த வழக்கறிஞர் தங்க விக்கிரமனை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது வழக்கறிஞரை மர்மக்கும்பல் வெட்டி சென்ற சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக வழக்கறிஞர் தங்க விக்ரமனுக்கு முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் கொலவெறி தாக்குதல் நடத்தியதா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், வழக்கறிஞரை சரமாரியாக வெட்டிய சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சோழவந்தானில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிர்ச்சி... மரண பயத்தில் மதுரை மக்கள்... சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு...!