நொடிப்பொழுதில் தப்பிய சிறுமி உயிர்... அரசு மருத்துவமனையில் நடக்கவிருந்த பயங்கரம்... திடுக்கிட வைத்த அலட்சியம்...!
அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் அலட்சியத்தால் சிறுமி உயிருக்கே ஆபத்து ஏற்பட்ட நிலையில் நூலிழையில் தப்பினார்.
14 வயது சிறுமிக்கு காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான பரிசோதனை முடிவு வேறு ஒருவரின் இரத்த மாதிரி மாறியதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோரின் சாமர்த்தியத்தால் சிறுமி உயிர் தப்பிய நிலையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் தலைமை மருத்துவர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் காளீஸ்வரி தம்பதியின் மூன்றாவது மகளான துர்கா. அவருக்கு வயது 14. சிறுமிக்கு தொண்டையில் சதை வளர்ந்து இருப்பதற்கு சிகிச்சைக்காக காரைக்குடி சூரக்குடி பகுதியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர். அங்கு சிறுமிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது அதன் பின்பு பரிசோதனை முடிவை வாங்கிய பொழுது முடிவை கொடுத்த லேப் டெக்னீசியன் உங்கள் குழந்தைக்கு மஞ்சள் காமாலை உள்ளது., கல்லீரலிலும் பிரச்சனை உள்ளது உடனடியாக குழந்தைகள் மருத்துவரை பார்க்கக் கூறியதாக தெரிகிறது.
இவர்கள் குழந்தைகள் மருத்துவரை அரசு மருத்துவமனையில் பார்த்தபோது மருத்துவர் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு சென்று அரசு மருத்துவமனையில் அளித்த பரிசோதனை முடிவுகளை கொடுத்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் மீண்டும் சிறுமிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்ட பொழுது அங்கு சிறுமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பரிசோதனை முடிவு வந்துள்ளது. தொண்டையில் மட்டும் சதை வளர்ந்துள்ளது. நான்கு நாட்களுக்கு மாத்திரை தருகிறோம் அதை சாப்பிட்டால் சரியாகும் என்று தனியார் மருத்துவமனையில் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: அழுகிப்போச்சு..! பிளாஸ்டிக் கவரில் துண்டிக்கப்பட்ட கை! நெல்லை டீன் ரேவதி வேதனை..!
அதனைத் தொடர்ந்து தவறான பரிசோதனை முடிவு கொடுத்த காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு தாய் மற்றும் அவரது அத்தை வந்து தவறாக பரிசோதனை முடிவு கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்பு அங்கு வந்த மருத்துவர்கள் தவறான பரிசோதனை முடிவு அளித்து இருந்தால் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களுக்கு சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். அலட்சியமாக மருத்துவமனை ஊழியர்கள் செயல்படுவதற்கு கண்டனம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: துண்டான வடமாநில தொழிலாளியின் கை..! கவரில் அனுப்பிய கொடூரம்! சங்கரன்கோவில் மருத்துவமனையில் அலட்சியம்..!