மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
நீட் வினாத்தாள் கசிவு, தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் கல்வித் துறை சீர்திருத்தங்கள் குறித்த கோரிக்கை மனுவைக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டாவிடம் அளித்தனர்.
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் முக்கியப் பிரதிநிதிகள், தற்பொழுது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சமீபகாலமாக ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் குறித்து விரிவாக விவாதித்த சிஜேபி பிரதிநிதிகள், அது தொடர்பான தங்களது முக்கியக் கோரிக்கை மனுவை அமைச்சரிடம் நேரில் சமர்ப்பித்தனர்.
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் வழங்கப்பட்ட அந்த மனுவில், சிஜேபி அமைப்பினர் பின்வரும் முதன்மையான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்த நீட் வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளுக்குக் காரணமான அனைத்து உயர்மட்ட நபர்கள் மீதும் எவ்வித ஒளிவுமறைவுமின்றி, கடுமையான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: "அடக்குமுறையால் இளைஞர்களின் குரலை ஒடுக்க முடியாது!" டெல்லியில் CJP மீதான தடியடிக்கு திமுக கண்டனம்!
இனிவரும் காலங்களில் இதுபோன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காத வண்ணம் ஒட்டுமொத்த மத்திய கல்வித்துறையிலும் அவசரக் காலச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். சிஜேபி பிரதிநிதிகளின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, இந்த விவகாரத்தில் மாணவர்களின் நலன் காக்கப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், நீட் முறைகேடு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் குறித்து இந்த மனுவில் நீங்கள் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக, மத்திய அரசிடம் விரிவாக ஆலோசித்து, சம்பந்தப்பட்ட கல்வி அமைச்சகத்துடன் இணைந்து உரிய முறையில் பேசி நல்ல முடிவெடுக்கப்படும் என்று தவெக கூட்டணி அரசின் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல முயன்றபோது தடியடி மற்றும் மெட்ரோ முடக்கம் போன்ற அடுத்தடுத்த பரபரப்புகளுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் இப்போராட்டக் குழுவினரை நேரடியாகச் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு! நாடாளுமன்ற நுழைவாயில்கள் அதிரடியாக மூடல்!