×
 

மக்களே கவனிங்க..! காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா..! தேதி வாரியாக புதிய கட்டுப்பாடுகள்..!!

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை ஒட்டி முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறும் நிலையில்பல்வேறு வசதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடில்களில் தங்கி வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது. இருப்பினும் இந்த கோவில் பாதுகாக்கப்பட்ட அடர் வனப்பகுதியில் உள்ளதாலும், தென் மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமான தாமிரபரணி ஆற்றின்‌அருகே இருப்பதால் பக்தர்களுக்கு சில காட்டு பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முந்தைய ஆண்டு போலவே பாரம்பரிய முறைப்படி ஆறு நாட்கள் வரை வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மோசடி... முக்கிய அதிகாரிகளுக்கு செக்... இறங்கி அலசும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்...!

மேலும் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் காரணமாக வருகிற ஆகஸ்ட் 7 மற்றும் 8 -ந் தேதி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. 9 -ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் தங்களது பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏதுவாக தனியார் வாகனங்களில் அனுமதிக்கப்பட உள்ளனர்.

தொடர்ந்து 10 -ந் தேதி முதல் 12 -ந் தேதி வரை அரசு பேருந்துகளில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். அன்றைய தினங்கள் தனியார் வாகனங்களுக்கு முக்கியமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதன்பின் 13 -ந் தேதி காலையில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படும், மறுதினம் 14 -ந் தேதி பக்தர்கள் பொருட்களை கீழே கொண்டு வருவதற்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதி அளிக்கப்பட உள்ளது.

அதன்பின் உழவாரப்பணி காரணமாகவும், தூய்மை பணிகள் மேற்கொள்ள இருப்பதாலும் 15, 16 -ந் தேதி பாபநாசம் வன சோதனை சாவடி மூடப்பட்டு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 17ஆம் தேதியிலிருந்து பக்தர்கள் வழக்கமான நடைமுறையில் அனுமதிக்கப்பட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் மோதலில் புதிய திருப்பம்! எகிப்து துறைமுகத்தில் டிரோன் தாக்குதல்!! சர்வதேச பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share