×
 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மோசடி... முக்கிய அதிகாரிகளுக்கு செக்... இறங்கி அலசும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்...!

அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்த நபர்களின் உண்மைத் தன்மை குறித்து உரிய ஆவணங்களை கேட்டு வருகின்றனர்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் ரூ.60 கோடி அறக்கட்டளை சொத்து பத்திரப்பதிவு விவகாரம் -பதிவு செய்த நபர்களின் உண்மை தன்மை குறித்த புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாச்சியரிடம் உரிய ஆவணங்களை கேட்டு கடிதம்

மதுரை மாநகர் கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் அசோகா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக கடந்த 1930 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2016 ஆம் ஆண்டு இராமாயி ஆயியார் உள்ளிட்ட 9 பேரின் பெயருக்கு முறைகேடாக மாற்றம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசன் இடைநீக்கம் செய்யப்பட்டு முன்னாள் வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கையும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: கொளுத்தப்போகுது வெயிலு! குடையை மறந்துடாதீங்க!! தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட்! உஷார்!

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு, இடைக்காலத் தடையாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 16.04.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் அனந்தராமன் மூலம் பொது அதிகார ஆவணம் பதிவு செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் 19.07.2021 அன்று திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சார்பதிவாளர் பிரசாந்த் சந்தான கருப்பன் மூலம் நில அடமானப் பத்திரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பாக மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் அளித்த புகாரின் கீழ்்இராமாயி ஆயியார், செந்தமிழ்ச் செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் VAO அரசன், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், இளையராஜா, அனிஷ், அனந்தராமன், கவிதா, பிரகாஷ், காளிக்குமார் மற்றும் பிரசாந்த் சந்தான கருப்பன் ஆகிய 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கிய மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்த நபர்களின் உண்மைத் தன்மை குறித்து உரிய ஆவணங்களை கேட்டு புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

வருவாய் துறை தரப்பில் அளிக்கும் பதிலை பொறுத்து அடுத்த கட்ட விசாரணை நடவடிக்கைகளை மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் தொடங்க உள்ளனர்

இதையும் படிங்க: அதிகாலையில் நடந்த அதிபயங்கரம்... ஸ்பாட்டிலேயே 6 பேர் உடல் நசுங்கி பலி... 50 பேரின் நிலை என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share