×
 

எக்ஸிட் போல் வெச்சி உருட்டுறீங்க..! பொட்டிய தொறந்தா தான் தெரியும்..! கார்த்தி சிதம்பரம் விமர்சனம்..!!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்த அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்முறையாக இந்த தேர்தலை சந்திக்கிறார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விஜய் மாற்றத்திற்கான முகமாக இருப்பார் என்று பலர் கூறி வருகின்றனர்.

இருப்பினும் திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் சொல்லி வருகின்றனர். மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார் என்றும் கூறி வருகின்றனர். இந்தச் சூழலில், பல்வேறு ஊடகங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் காட்டியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. விஜய்க்கு வாக்கு செலுத்த வேண்டும் என இணையதளத்தில் பேசியதையும், டிரஸ் கோட் அணிந்து சென்ற விஜய்க்கு ஓட்டு போட்டதையும், ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன் என்று கூறி வந்ததையும் பார்த்திருப்போம். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியான நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பாஜக இருக்கும் வரை நீட் விலக்கு கிடைக்காது... கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்..!!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. செய்தியாளர்களிடம் பேசிய அவர் கருத்துக்கணிப்பெல்லாம் நான் சீரியஸா எடுத்துக்குறதே இல்ல என்று கூறினார். எக்ஸிட் போல் வைத்து உருட்டிட்டு இருக்கீங்க என்று விமர்சித்தார். பொட்டிய திறந்தா தான் தெரியும் யார் வெற்றிப்பெற போறாங்கணு என்று கூறி இருக்கிறார். தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்தும் பேசினார். 

இதையும் படிங்க: என்னவா இருக்கும்..? "சின்னதம்பி உன்னை நம்பி காத்திருக்கு இந்த நாடு"..! விஜய் போட்டோவுடன் பாடலை பகிர்ந்த இளையராஜா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share