×
 

பாஜக இருக்கும் வரை நீட் விலக்கு கிடைக்காது... கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்..!!

பாஜக இருக்கும் வரை நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மானாமதுரை (தனி) சட்ட மன்ற தொகுதியில் திமுக சார்பாக மீண்டும் முன்னாள் அமைச்சர் தமிழரசி போட்டியிடுகிறார். தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடத்த திமுக சார்பில் மானாமதுரை எம் எல் ஏ அலுவலகம் முன்பு உள்ள காலி பட்டா இடத்தில் கூரை வேய்ந்து தற்காலிக அலுவலகம் தொடங்கினர் . இன்று தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டத்திற்கு சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் வந்திருந்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த வருடம் தேர்தலில் நீட், எய்ம்ஸ் எதிரொலிக்குமா என்ற கேள்விக்கு, நீட் வேண்டாம் என்றுதான் பரவலான கருத்து அது மற்ற மாநிலங்களும் குரல் கொடுக்க வேண்டும் மத்தியில் இந்த அரசாங்கம் இருக்கும் வரை விலக்கு கொடுப்பார்களா என்ற நம்பிக்கை இல்லை என்று கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வந்தால் மாநிலங்கள் ஆப்டிநல் ஆப்போர்ட் செய்யலாம்., காங்கிரஸ் கட்சி கான்செப்டாக கொண்டு வந்தது., இதை அமல்படுத்தியது பாஜக என்று தெரிவித்தார் .கான்செப்டாக வரும் பொழுது மாநிலங்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம்., ஒவ்வொரு மாநிலங்களும் தனியாக முடிவு எடுத்துக் கொள்ளலாம் என இருந்ததை அதை திருத்தியது பாஜக தான் என்றார்.

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்.. சூடுபிடிக்கும் களம்..!! காங்கிரஸ் கட்சியின் ஸ்டார் பேச்சாளர்கள் யார் யார் தெரியுமா..??

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் குளறுபடி, மேலுரில் வேட்பாளர் பிரச்சினை குறித்த கேள்விக்கு, 28 பேர்தான் இருக்கிறோம் 28 பேரையும் திருப்திபடுத்த முடியும் 29 வது நபருக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும் திமுகவில் கூட 175 பேர் நிற்கின்றனர் 176 பேருக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும் எதிர்பார்ப்புகளும் வரைவுக்குள் தான் இருக்க வேண்டும் என்றார். பாஜக இருக்கும் வரை நீட் விலக்கு கிடைக்காது என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: #BREAKING: சஸ்பென்ஸ் ஓவர்... காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? முழு விவரம் வெளியீடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share