எடப்பாடியார் மீண்டும் தோற்பார்! முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் அதிரடி!
7 முறை தேர்தலில் நின்ற எடப்பாடி பழனிசாமி; 5 முறை வெற்றி, 2 முறை தோல்வி – முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கணிப்பு.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மூன்றாவது முறையாகத் தோல்வியைத் தழுவுவார் என்று முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இணைந்துள்ள கருணாஸ், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வரலாற்றைச் சுட்டிக்காட்டிய கருணாஸ், அவர் இதுவரை 7 முறை தேர்தல்களைச் சந்தித்து அதில் 5 முறை வெற்றி பெற்றுள்ளதையும், 2 முறை தோல்வியடைந்துள்ளதையும் நினைவுபடுத்தினார். தற்போதைய அரசியல் சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும், அதன் விளைவாக எடப்பாடியார் இந்தத் தேர்தலில் தனது மூன்றாவது தோல்வியைச் சந்திப்பார் என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இதுவரை 7 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவர் 5 முறை வெற்றி பெற்றுள்ளார், 2 முறை தோல்வியைத் தழுவியுள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் 3-வது முறையாகத் தோல்வி அடைவார் எனப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 இடங்கள்! 'தாமரை' சின்னத்தில் களம் காணும் ஜி.கே.வாசன்!
முன்னதாக, திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படைக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் 'உதயசூரியன்' சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி இன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்து தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், கருணாஸின் இந்த விமர்சனம் அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: "இலவசம் முதல் கடன் தள்ளுபடி" - 297 அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவீசிய எடப்பாடி பழனிசாமி!