#BREAKING: கரூரில் உண்மையில் நடந்தது என்ன? விசாரணையை தொடங்கிய தனிநபர் ஆணையம்..!
கரூர் துயரச் சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை தொடங்கியது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சமும், விஜய் தரப்பில் 20 லட்சமும், மத்திய அரசு தரப்பில் 2 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: DMK FAILS… ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி… சாட்டையை சுழற்றிய இபிஎஸ்…!
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். விஜய் பிரச்சாரத்தின் போது கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கரூருக்கு சென்றார். கரூர் துயரச் சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை தொடங்கியது.
இதையும் படிங்க: மொதல்ல குடிக்கு முடிவு கட்டுங்க... அப்புறம் பேசலாம்... முதல்வரை விமர்சித்த தமிழிசை...!