#BREAKING: DMK FAILS… ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி… சாட்டையை சுழற்றிய இபிஎஸ்…!
திமுக ஆட்சியில் ஒரு கூட்டம் நடத்தவே சிரமப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் நடத்தினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கரூருக்கு விரைந்துள்ளனர்.
இந்த நிலையில், கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஏற்கனவே நடந்த கூட்டத்தை பார்த்து அரசும் காவல்துறையும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு நடுநிலையோடு செயல்பட்டு இருக்க வேண்டும் என்றும் முழு பாதுகாப்பை தர காவல்துறை மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார். கூட்டத்திற்கு ஏற்ப அரசியல் கட்சி தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்வதற்கு முழு பாதுகாப்பை அளித்ததாகவும், திமுக ஆட்சியில் ஒரு கூட்டம் நடத்தவே சிரமப்படுவதாகவும் கூறினார். மெரினாவில் நடந்த ஏர் ஷோவின் போது ஐந்து பேர் பலியாகியதாகவும், விஷ சாராயம் குடித்து 68 பேர் மரணம் அடைந்ததாகவும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: அசாதாரண நிலை.. இரவோடு இரவாக கரூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்... உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி...!
ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி எதிர்க் கட்சிக்கு ஒரு நீதி எனவும் முழு பாதுகாப்பை தருவது அரசின் கடமை என்றும் தெரிவித்தார். விஜய் பிரச்சாரத்தில் இதற்கு முன்பு எந்த பிரச்சனையும் இல்லையே என்றும் தனிநபர் கமிஷன் அமைத்தது நோக்கம் என்ன என்று தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார். விஜய்க்கு அட்வைஸ் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த இபிஎஸ், ஒரு கட்சித் தலைவர் மற்றொரு கட்சி தலைவருக்கு அறிவுரை கூறக்கூடாது என்றார். இதுபோல் இனி ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அய்யோ! பிணவறையை பார்க்கும்போதே…. உடைந்து அழுத கரூர் எம்.பி. ஜோதிமணி…!