கரூர் சம்பவத்தின் வதந்திகள்... யூடியூபர் பெலிக்ஸ்க்கு நிபந்தனை ஜாமின்...!
கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட பெலிக்ஸ்க்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பக் கூடாது என்றும் அறிவுரை வழங்கினார். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். கரூர் சம்பவத்தின் எதிரொலியாக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டது. இதில் கரூர் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் ரெட் பிக்ஸ் நிறுவனர் பெலிக்ஸ் கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக நேற்று காலை கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: பூவை ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமீன் உறுதி... வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்!
தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் குறித்து யாரும் வதந்தி பரப்ப கூடாது என்றும் தனிநபர் ஆணையத்தின் முடிவு வந்தவுடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: நிதி மோசடி வழக்கு... தேவநாதன் யாதவிற்கு இடைக்கால ஜாமீன்! ஹைகோர்ட் தடாலடி உத்தரவு