பூவை ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமீன் உறுதி... வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்!
ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன்ஜாமீனை உறுதி செய்து வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஜெகன் மூர்த்தி 2002ஆம் ஆண்டு முதல் புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். 2006இல் அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட அவர், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 2021இல் கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றி பெற்றார். கே.வி.குப்பம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த வருகிறார்.
இந்த நிலையில், காதல் திருமணம் செய்து வைத்தது தொடர்பான ஆள் கடத்தல் வழக்கு குறித்து விசாரிப்பதற்காக போலீசார் சென்றுள்ளனர். இதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தி வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். இதனால் ஜெகன் மூர்த்தியின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்த தடவை முன்ஜாமின் வளர்க வேண்டும் என்று எம்எல்ஏ பூவை ஜகன் மூர்த்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் முன் வைத்தது. இந்த நிலையில், ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விஜய்க்கு ஷாக்... பணத்தை டெபாசிட் பண்ணுங்க! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
அப்போது அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த நாள் வரை தன்மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றும் பூவை ஜெகன் மூர்த்தி தரப்பில் வாதாடப்பட்ட நிலையில், நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேலை யாரும் புகார் அளிக்காமல் இருந்திருக்கலாம் நீதிபதி தெரிவித்தார். வழக்கு விசாரணைக்கு சரி வர ஒத்துழைப்பு அளிக்காததால் அவருக்கு ஜாமின் கொடுக்க கூடாது என்று போலீசார் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் பூவை ஜெகன் மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமினை உறுதி செய்தது. மேலும் இரு தரப்பு குடும்பத்தினரும் சமரசமாக பேசி முடிவுக்கு வந்துள்ள நிலையில் வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இதையும் படிங்க: பரப்புரைக்கு அனுமதி வேணுமா? ஏதாச்சு நடந்தா யார் பொறுப்பு? விஜய்க்கு கோர்ட் சரமாரி கேள்வி…