அரசியல் தற்குறி! கொலை குற்றவாளி...! விஜயை கைது செய்ய வலியுறுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்… சர்ச்சை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சுட்டிக்காட்டி விஜயை கைது செய்ய வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.
கரூர் கோரச் சம்பவம் மனதில் நீங்காத வடுவாக மாறியது. வரலாற்றுப் பெரும் கொடுமையாக உருவெடுத்துள்ளது. விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கடந்த சனிக்கிழமை இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்த நிலையில் இதுவரை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களை சென்று சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை விஜய் வந்து இன்னும் ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. உயிரிழப்புகள் குறித்து தகவல் அறிந்ததும் தனி விமான மூலம் சென்னைக்கு விஜய் திரும்பி விட்டாரே., அறிக்கை மட்டும் விடுகிறாரே அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லையா என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் சம்பவம் "திட்டமிட்ட சதி"... குண்டைத் தூக்கிப் போட்ட தவெக...!
விஜய் மீது தவறில்லை என ஒரு தரப்பும்., விஜய் தாமதமாக வந்தது தான் இதற்கு முக்கிய காரணம் என்று மற்றொரு தரப்பும் கூறி வருகின்றனர். இதனிடையே, விஜயை கண்டித்து கரூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. அப்பாவி உயிர்களை பலிவாங்கி, தப்பி ஓடிய விஜய் எனும் அரசியல் தற்குறியை கொலை குற்றவாளி என கைது செய் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: தவெக நிர்வாகி மீது கொலை வழக்கு... அதிரடி காட்டிய போலீஸ்…!