×
 

கரூர் விபத்தில் உண்மை வெளிவருமா? மருத்துவர், ஆட்சியரிடம் 2 மணி நேரம் சிபிஐ விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு செய்த 5 மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது.

கரூரில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் இன்று 2-வது நாளாகத் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்த 5 மருத்துவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

கரூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள், இன்று காலை கரூர் மாவட்ட ஆட்சியரிடம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்த 5 மருத்துவர்கள் சம்மன் அடிப்படையில் கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாகத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தொடர் விசாரணைகள், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான உண்மைக் காரணம், உயிரிழப்புகளுக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள், மற்றும் உடற்கூராய்வு அறிக்கைகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றைச் சரிபார்த்து உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இதையும் படிங்க: மறக்க முடியாத கரூர் துயரச் சம்பவம்..!! திமுக ஆட்சியின் நிர்வாக நெருக்கடி அம்பலம்..!!

இதையும் படிங்க: திண்டுகல்லில் 144 தடை உத்தரவு! இரு தரப்பினர் மோதலைத் தடுக்க 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share