×
 

திண்டுகல்லில் 144 தடை உத்தரவு! இரு தரப்பினர் மோதலைத் தடுக்க 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

சின்னாளபட்டி அருகே மண்டு கருப்பண்ணசாமி கோவிலில் தீபம் ஏற்றுவதில் இருதரப்பினருக்கு இடையேயான மோதலை தடுக்க, 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள பெருமாள் கோயில்பட்டியில், மண்டு கருப்பணசாமி கோயில் மற்றும் காளியம்மன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் போக்கைத் தடுக்க, மாவட்ட ஆட்சியர் தலைவர் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சின்னாளபட்டி அருகே அமைந்துள்ள இந்தக் கோயிலைச் சுத்தம் செய்து, கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக ஒரு தரப்பினர் முயற்சி மேற்கொண்ட நிலையில், மற்றொரு தரப்பினர் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க 200-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக இந்துக்கள் தரப்பினர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதி பெற்று, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளனர். இந்த அனுமதிக் கடிதத்தை மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தெரிவித்தபோது, அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அங்குப் பரபரப்பான சூழல் உருவானது. உயர் நீதிமன்ற அனுமதி பெற்றும் மறுப்பு தெரிவித்ததால், மாவட்ட நிர்வாகம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக மற்றொரு தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: #BREAKING: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 2) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இதற்கு அனுமதி பெற்ற கோயில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானது. இதனையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரையின் பெயரில், மாவட்ட ஆட்சியர் தலைவர், பெருமாள் கோயில்பட்டியில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர உத்தரவிட்டார். தொடர்ந்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'பாம் சைக்ளோன்' ஒரே வாரத்தில் மூன்றாவது பனிப்புயல்!! திணறும் அமெரிக்கா!! 5.5 கோடி பேர் பாதிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share