×
 

அம்மாடியோவ் ஒரு சிலிண்டர் விலை இவ்வளவா? - இனி காலை 11 மணி முதல் 4 மணி வரை அதிரடி மாற்றம்... ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி முடிவு...! 

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு ரோஸ்ட் வகைகள் மற்றும் சைனீஸ் உணவுகள் தயாரிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

கரூரில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தனியார் சிலிண்டர் 3000 ரூபாய் வரை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு ரோஸ்ட் வகைகள் மற்றும் சைனீஸ் உணவுகள் தயாரிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது
 ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவித்துள்ளார். 

நாடு முழுவதும் நிலவி வரும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, கரூர் மாவட்ட ஹோட்டல்களில் உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை நேரத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

கரூர், ஜவஹர் பஜாரில் உள்ள தனியார் பலகார கடை கூட்டரங்கில் நடைபெற்ற சங்கக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் கருப்பசாமி, கடந்த காலங்களில் 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தனியார் காஸ் சிலிண்டர்கள், தற்போது தட்டுப்பாடு காரணமாக 4,000 முதல் 4,500 ரூபாய் வரை டெண்டர் முறையில் விற்கப்படுவதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Indane வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் இதோ..!!

சிலிண்டர் பயன்பாட்டைக் குறைக்க, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு ரோஸ்ட் வகைகள் மற்றும் சைனீஸ் உணவுகள் தயாரிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஓட்டல் தொழிலில் குறிப்பிட்ட நேரத்தை குறைத்துக்கொள்ளவும், எளிமையான காலை உணவுகளான இட்லி, பொங்கல், தோசை ஆகியவற்றை மட்டும் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு நெருக்கடி இருந்தபோதிலும், வாடிக்கையாளர்களின் நலன் கருதி கரூர் மாவட்டத்தில் ஹோட்டல் உணவுகளின் விலையை உயர்த்தப் போவதில்லை. இந்தத் தட்டுப்பாடு நீடித்தால் விறகு, மின் அடுப்பு போன்ற மாற்று எரிபொருள்களுக்கு மாறுவது குறித்தும், டீ போன்ற பானங்களை பாய்லர் மூலம் தயாரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

எந்தச் சூழ்நிலையிலும் கடைகளை மூட மாட்டோம். குறைந்த அளவிலான உணவு வகைகளுடன் வாடிக்கையாளர் சேவையைத் தொடருவோம். 10 நாட்களைக் கடந்தும் பிரச்சனை முடியவில்லை என்றால் விலையேற்றத்துக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திக்.. திக்...!! - மெல்ல, மெல்ல ஸ்தம்பிக்கும் தமிழகம்... நாளை முதல் இவையெல்லாம் இயங்க வாய்ப்பே கிடையாது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share