கரூர் சம்பவம் குறித்து வதந்தி… 25 பேர் மீது பாய்ந்த வழக்கு… விரைவில் ARREST!
கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்கள் வழியே வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றி கழகம் 2026 தேர்தலை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு நாற்பது பேர் பலியாகி இருந்தனர். இன்று மேலும் ஒரு பெண்மணி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக எந்த ஒரு அவதூறு மற்றும் வதந்திகளை பரப்ப கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில்,vகரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளங்கள் வழியே வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: உங்க நிலை புரியுது... மீண்டு வாங்க விஜய்! பாஜக அமர் பிரசாத் ஆறுதல்…!
அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி… கரூருக்கு நிர்மலா சீதாராமன் DIRECT VISIT…!