கரூர் சம்பவம் சிபிஐக்கு மாற்றப்படுமா? அதீத எதிர்பார்ப்பு... பொதுநல மனுக்கள் இன்று விசாரணை...!
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை.
இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் அரசியல் கட்சியினரின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
தமிழக அரசு அமைத்த தனிநபர் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படும் என்றும் எனவே சிபிஐ விசாரணைக்கு கரூர் சம்பவம் உட்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. பொதுநல மனுக்களுக்கு சாதகமாக கரூர் சம்பவம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு.. சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!
அது மட்டும் அல்லாது முன்ஜாமின் கூறி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இருவருக்கும் முன் ஜாமின் மறுக்கப்படும் பட்சத்தில் உடனடியாக கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இதான் வித்தியாசம்! கொலம்பியா பல்கலையில் ராகுல் காந்தி மாஸ் பேச்சு!