அங்கு என்ன நடந்தது? கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரணை...!
கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் மூன்றாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது. கரூர் கூட்ட நெரிசலில் குடும்பங்களை மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.
கரூர் சம்பவத்தை விசாரிக்க முதலில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனிநபர் ஆணையம் அமைத்தார். இதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கரூர் சம்பவத்தை சிபிஐ க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் தொடங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் எதிரொலி… பனையூரில் முகாமிட்ட CBI அதிகாரிகள்..! நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!
இதனிடையில் கரூரில் வேலுச்சாமிபுரத்தில் உள்ள வணிகர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்களிடம் விசாரிக்கப்பட்டது. SSI அதிகாரி உள்ளிடோரிடம் விசாரிக்கப்பட்டது. பனையூருக்கே சென்ற சிபிஐ அதிகாரிகள் சிசிடிவி உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் காயமடைந்தவர்களிடம் சிபி அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். மூன்றாவது நாளாக கரூர் சம்பவத்தால் காயமடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரூர் துயர குடும்பங்கள்: மாமல்லபுரத்தில் விஜய்யின் ஆறுதலுக்குப் பின் கரூர் புறப்பட்டனர்..!!