×
 

கரூர் கோரம்..! அரசு வேலையை எதிர்த்த வழக்கு..!! டி என் பி எஸ் சி பதிலளிக்க உத்தரவு..!

கரூர் அரசு வேலை விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் 2025 செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பின்னணியில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு, நிதியுதவி உள்ளிட்ட உதவிகளுடன், கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க முடிவு செய்தது. 

இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முக்கிய மனுதாரர்களில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் அடங்குவர். மனுக்களில், அரசு வேலை வழங்குவது அரசியல் சாசனத்தின் 14 மற்றும் 16 வது பிரிவுகளுக்கு எதிரானது என்றும், TNPSC மூலம் போட்டித் தேர்வு முறையை மீறுவது என்றும், எந்த சீரான கொள்கை அல்லது அரசாணை இல்லாமல் இத்தகைய நியமனம் செய்வது தவறு என்றும் வாதிடப்பட்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இத்தகைய நடவடிக்கை விசாரணையை பாதிக்கும் என்றும் கூறப்பட்டது. TNPSC வாயிலாக வேலை தேடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உரிமைகளை பாதிக்கும் என்பதும் எதிர்ப்பின் முக்கிய காரணமாக இருந்தது. 

2026 ஜூலை 10 அன்று மதுரை உயர் நீதிமன்ற அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. அன்று மாலை கரூரில் முதலமைச்சர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பணி ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்று கூறியது. “கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு? அவர்களுக்கு பொருளாதார உதவி தேவைதானே?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதையும் படிங்க: 'கர்த்தரின் தேவதூதர் விஜய், மாரியம்மன் ஜோதிமணி'... கரூரில் சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்!

எனினும், இடைக்கால உத்தரவாக, பணி நியமனங்கள் தற்காலிகமானவை மட்டுமே என்றும், நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டவை என்றும், வழக்கின் இறுதி முடிவு வரை நிரந்தர உரிமை உருவாக்காது என்றும் தெரிவித்தது. முதலமைச்சரின் நிகழ்ச்சியை ரத்து செய்யாமல் தொடர அனுமதித்த நீதிமன்றம், மேலும், தானாகவே TNPSC உறுப்பினர் செயலரை வழக்கில் இணைத்து, கருணை அடிப்படை நியமன விதிகள் என்ன, அவை இங்கு பின்பற்றப்பட்டனவா என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இது TNPSC-யின் பங்கை வலியுறுத்தும் முக்கிய அம்சமாகும். 

இதையும் படிங்க: தூங்குதா சிங்கப்பெண் படை..? ஆட்சி லட்சணம் பல் இலிக்குது... முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share