தூங்குதா சிங்கப்பெண் படை..? ஆட்சி லட்சணம் பல் இலிக்குது... முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!
குளித்தலையில் தமிழக வெற்றி கழக நிர்வாகி பாலியல் தொல்லை அளித்ததாக போலீசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
பெண்களை துரத்தும் தவெக நிர்வாகிகள், தூங்குகிறதா சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய திருமணமான பெண்ணை பின் தொடர்ந்தும், பாலியல் ரீதியாக சைகைகள் காட்டியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெகவின் ஒன்றிய செயலாளர் ரமேஷ் என்பவரை, பொதுமக்களே தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பது மட்டுமன்றி வன்மையான கண்டனத்திற்குரியது என்று கூறினார்.
அதிலும் குறிப்பாக, இந்த தொடர் பாலியல் தொல்லை குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தும் கூட, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டுவது, காவல்துறையை நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கம் முதல்வர் விஜயின் நிர்வாகத் திறனையே கேள்விக்குறியாக்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
“தவெகக்காரன்” என்ற அடைமொழி குற்றங்கள் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறி வருகிறதா? என்றும் உள்ளூர் தவெக நிர்வாகிகளின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அஞ்சுகிறதா? என்று மக்கள் கேட்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோயில் நில வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்ன செய்து கொண்டிருக்கிறது? உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கான பதிலை முதல்வர் தேடினாலே, அவரின் ஆட்சியின் லட்சணம் தெரிந்து விடும் எனவும் தெரிவித்தார். எனவே, இனியாவது ஜோசப் விஜய் தனது கட்சி நிர்வாகிகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: ரூ.25,000 கோடி மதிப்புள்ள கோயில் சொத்து தாரைவார்ப்பு?!! அறநிலையத்துறை உத்தரவால் சலசலப்பு!