#BREAKING! தவெக தலைவர் விஜய் மீது வழக்கு? ஸ்டாலின் போட்ட உத்தரவு! களமிறங்கிய செந்தில்பாலாஜி!
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர் நடிகர் விஜயின் கரூர் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 16 பெண்கள், 9 ஆண்கள், 6 குழந்தைகள் என்பது உறுதியாகியுள்ளது. காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதேநேரம், இந்நிகழ்வு குறித்து உடனடி அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் அரசு மாவட்ட தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: BREAKING! டாக்டர்ஸ் உடனே கரூர் வாங்க! பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல பீஸ் வாங்காதீங்க! பறக்கும் உத்தரவு!!
தகவல் அறிந்த முதல்வர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், எனக்கும் தொடர்பு கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் செல்ல உத்தரவிட்டார். கூடுதல் மருத்துவர் வரவழைத்து உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் நேரில் செல்ல உத்தரவிட்டுள்ள நிலையில் அவர்களும் கரூர் வந்து கொண்டிருக்கின்றனர்.
முதல்வர் இங்கு நேரில் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளார். தற்போது 46 பேர் தனியார் மருத்துவமனையிலும் 12 பேர் மாவட்ட கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நம்முடைய மாவட்டத்தின் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் அனைவரும் இப்போது பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் கூடுதலாக நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் வரவழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று இரவே அவர்கள் இங்கு வந்து சிகிச்சை அளிக்க உள்ளனர்.
த.வெ.க தலைவர் விஜய் மீது வழக்கு தொடரப்படுமா? என்ற கேள்விக்கு முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். அதன் பிறகு இது பற்றி பேசலாம் என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இதையும் படிங்க: BREAKING! டாக்டர்ஸ் உடனே கரூர் வாங்க! பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல பீஸ் வாங்காதீங்க! பறக்கும் உத்தரவு!!