×
 

விஜய் தான் டார்கெட்! வழக்கு போட தயாராகும் திமுக! ஐகோர்ட் முதல் திருமா வரை அழுத்தம்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய, தி.மு.க., அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தையும் தாண்டி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் அரசியல் கூட்டணிகளை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) சார்பில் அமைக்கப்பட்ட எட்டு எம்.பி.க்களின் குழு கரூரை நேரில் பார்வையிட்டு விசாரித்து திரும்பியுள்ளது. காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கரூரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விஜயிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறியுள்ளனர்.

இதுவரை 'தி.மு.க.வுடன்தான் போட்டி' என விஜய் பிரசாரம் செய்து வந்த நிலையில், இந்த துயரச் சம்பவத்தால் ஏற்பட்ட நெருக்கடி அவரை கூட்டணி அமைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணியில் விஜயை இணைக்க அமித் ஷா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: விஜய் கைது கன்பார்ம்?! கச்சிதமாக காய் நகர்த்தும் திமுக! உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

இதை உறுதிப்படுத்துவது போல, ராமநாதபுரத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட போது உடனடியாக வராத, நிதி உதவி தராத மத்திய அரசு, கரூருக்கு மட்டும் ஏன் உடனே வருகிறது? 

மணிப்பூர் கலவரம், குஜராத் பால விபத்து, கும்பமேளா நெரிசல் போன்றவற்றுக்கு விசாரணைக் குழு அனுப்பாத பா.ஜ., கரூருக்கு மட்டும் அனுப்புகிறது. இதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறலாமா, யாரையாவது மிரட்டலாமா என பா.ஜ. பார்க்கிறது" என கடுமையாக விமர்சித்தார். அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணியில் விஜய் சேர்ந்தால் தங்கள் கூட்டணிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தி.மு.க. அஞ்சுகிறது.

இதன் காரணமாக, கரூர் சம்பவத்தைப் பயன்படுத்தி த.வெ.க.வுக்கு நெருக்கடி கொடுக்கவும், விஜய்யின் பிரசாரத்தை நிறுத்தவும் தி.மு.க. திட்டமிட்டு செயல்படுவதாக கூறப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றம் கரூர் சம்பவத்தில் த.வெ.க.வின் செயல்பாடுகளைக் கண்டித்து, ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்.ஐ.டி.) அமைத்துள்ளது. 

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, 41 உயிரிழப்பு வழக்கில் விஜய் பெயரை சேர்க்க தி.மு.க. அரசு தயாராகி வருவதாக தகவல்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் திருமாவளவன், "விஜய் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசுக்கு என்ன தயக்கம்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

எழுத்தாளர்கள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள், சினிமா துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலர், "விஜய் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்கக் கூடாது" என கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். முன்னாள் நீதிபதி சந்துரு, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பாலகிருஷ்ணன், தேவசகாயம், எம்.பி.க்கள் ரவிக்குமார், சல்மா, எழுத்தாளர்கள் வண்ணதாசன், பொன்னீலன், பெருமாள் முருகன் ஆகியோர் வெளியிட்ட இந்தறிக்கையில், "கரூர் கூட்டத்துக்கு தாமதமாக வந்த விஜய், கூட்டத்திற்குள் முகம் காட்டாமல் மக்களை வண்டியின் பின்னால் அலையவைத்ததே உயிரிழப்புக்கு காரணம். 

வீடியோ சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. சம்பவத்துக்குப் பின் இரண்டு நாட்களில் வெளியிட்ட வீடியோவில் குற்ற உணர்ச்சி இல்லாமல் அரசைப் பழிசுமத்தியுள்ளார். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. 

இதனால், விஜய் மீது விரைவில் வழக்கு பதிவு செய்ய தி.மு.க. திட்டமிட்டுள்ளதாகவும், அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணியில் அவரை இணைவதைத் தடுக்க முயல்வதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என பரபரப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் தவெக?! யாரை சேர்க்க நினைத்தாலும் இதான் பதில்! பாஜகவை வெளுத்த ஸ்டாலின்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share