“விஜய் சார் வந்தும் இப்படி நடக்கணுமா...” - அரசு வேலை வழங்குவதில் மோசடி?... கரூர் சம்பவத்தில் மகனை இழந்த தாய் கண்ணீர் மல்க புகார்...!
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டால் நாயை அடித்து விரட்டுவது போல மிரட்டுகிறார்கள்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலைக்கான நியமன ஆலை வழங்குவதில் பணத்தை வாங்கிக் கொண்டு அதிகாரிகள் முறைகேடில் ஈடுபட்டதாக கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவனின் தாயார் கண்ணீருடன் ஆதங்கம்
தமிழக முதல்வரும், த.வெ.க தலைவருமான ஜோசப் விஜய், இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இந்தப் பயணத்தின் போது, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.
இந்த நிலையில் அரசு வேலைக்கான நியமன ஆணை வழங்குவதில் அதிகாரிகள் பணத்தை வாங்கிக் கொண்டு முறைகேடில் ஈடுபட்டதாக உயிரிழந்த சிறுவனின் தாயார் திருவளர்செல்வி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணீருடன் பரபரப்பு பேட்டியளித்தார்.
இதையும் படிங்க: முதல்வராக கரூரில் கால் வைக்கும் விஜய்... கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா? - இன்று காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்...!
கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த திருவளர்ச்செல்வி கரூர் மாவட்டம் பஞ்சம்பட்டியைச் சேர்ந்த ரகுநாதன் என்பவரை திருமணம் செய்து உள்ளார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி திருவளர் செல்வியின் 13 வயது மகன் மனோஜ் வர்ஷன் உயிரிழந்துள்ளார்.
திருவளர் செல்வியும் ரகுநாதனும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் திருவளர் செல்விக்குத் தெரியாமல் ரகுநாதன் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து தனக்கு வரவேண்டிய அரசு பணியை முறைகேடாக வாங்கி உள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டால் நாயை அடித்து விரட்டுவது போல மிரட்டுகிறார்கள் என்று கூறினார். தவெக காட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்று கூறிய விஜய் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் ஆன பின் முதல் முறை கரூர் விசிட்... தூள் கிளப்ப காத்திருக்கும் விஜய்... இன்றைய மாஸ்டர் பிளான் என்ன?