×
 

சினிமாவை வெச்சுகிட்டு தேர்தல்ல ஜெயிக்க முடியுமா? - விஜய் குறித்து கே. பி. முனுசாமி விமர்சனம்...!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து கே.பி. முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி, தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தொடங்கபட்டது. பிறகு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, கட்சியானது 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இரு மொழிக் கொள்கை, சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை, சமூகவுடைமை ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாக விஜய் அறிவித்தார். 

மக்களிடையே விஜய்க்கு பேராதரவு பெருகத் தொடங்கியது. தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில், முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அப்போது, 100 அடி கொடிக்கம்பத்தில் விஜய் கட்சிக் கொடியை ஏற்றி, கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் ஒரு வருடத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்று, 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மக்கள் ஆதரவுடன் முன்னேறி வருகிறது. விஜயின் ரசிகர் பட்டாளம், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. 

இதையும் படிங்க: விஜய் கட்சிக்கு விசில் சின்னம்? தேர்தல் ஆணையத்தை நாடும் தவெக...!

2026 தேர்தலை மட்டுமே குறியாக வைத்து தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருகிறது. மக்களுடன் விஜயின் தொடர் சந்திப்புகள் குறித்து திட்டமிடங்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்து அறிவிக்கப்பட்டது. தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை மிகவும் சிறப்பாக தொடர்ந்தார் விஜய். இருப்பினும் கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது அவரது சுற்றுப்பயணத்திற்கு தடையாக அமைந்தது. தமிழக வெற்றி கழகம் துவண்டு போகும் சூழலுக்கு ஆளானது. தற்போது தமிழக வெற்றி கழகம் தேர்தல் பணிகளில் வேகம் காட்ட தொடங்கியுள்ளது.

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார். சிலருக்கு மக்களோடு நேரடியாக தொடர்பு இல்லை என்று கூறினார். ஆனால், சினிமாவில் நடித்ததை வைத்துக்கொண்டு, ஒரு பெரிய கட்டமைப்பை உருவாக்கிவிட்டதுபோல தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டு, தேர்தல் களத்திற்கு வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சகட்டுமேனிக்கு பேசிய விஜய்... என்ன ஒரு பித்தலாட்டம்! வைகோ காட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share