×
 

சகட்டுமேனிக்கு பேசிய விஜய்... என்ன ஒரு பித்தலாட்டம்! வைகோ காட்டம்...!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து வைகோ விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். கரூர் சம்பவம் நடந்த 40 நாட்கள் கழித்து விஜய் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதை சுட்டிக்காட்டி விமர்சித்து இருந்தார். பெருந்தன்மையை பெயரளவில் மட்டுமே பேசுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் கரூர் விவகாரம் குறித்த சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் வன்மத்தை கக்கி உள்ளார் எனவும் தெரிவித்தார்.

அரசியல் காழ்ப்புடன், நேர்மையில்லாமல், குறுகிய மனதுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார் என்றும் 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது பொய் எனவும் தெரிவித்தார். வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறை சட்டம் மற்றும் சக்தியின் துணை மூலம் துடைத்தெறிய போகிறோம் என்று கூறிய விஜய், உச்சபட்ச அதிகார மயக்கத்தில் இருந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினாரா என்று கேள்வி எழுப்பினார். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்ற அறிக்கையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் விஜய் பேசி இருந்தார்.

மதிமுக வின் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே கரூர் சம்பவத்தில் முதலமைச்சரின் செயல்பாடு குறித்து விஜய் விமர்சித்திருந்தார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக பேசியுள்ளார். கரூர் பெருந்துயர விவகாரத்தில் விஜய் செய்தது பித்தலாட்டம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரோடு ஷோ தேவையே இல்ல... தடை பண்ணுங்க... திருமாவளவன் காட்டம்...!

சென்னை அழைத்து வந்து துக்கம் கேட்டுள்ளார் விஜய் என்றும் இது யாரும் செய்யாத பித்தலாட்டம் எனவும் காட்டமாக பேசினார். கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் அரசியல் பேச வேண்டாம் எனக் கூறினார் என்றும் ஆனால் விஜய் சகட்டுமேனிக்கு பேசி உள்ளார் என்றும் விமர்சித்துள்ளார். 

இதையும் படிங்க: விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால்... ஓபனாக பேசிய TTV தினகரன்..! செம்ம ஷாக்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share