கேரள நடிகை மினு முனீர் விடுவிப்பு! அடையாளம் காட்ட இளம் பெண் திணறுவதால் சிக்கல்...
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கேரள நடிகை மினு முனீர் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மலையாளத் திரையுலகில் நடிகையாக அறியப்பட்ட மினு முனீர், தனது திரைப் பயணத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர். அவரது திரை வாழ்க்கை, சவால்கள் மற்றும் சர்ச்சைகளால் நிறைந்ததாக இருந்தாலும், அவரது பங்களிப்பு மற்றும் அனுபவங்கள் மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்கவை.
மினு முனீர் மலையாளத் தொலைக்காட்சித் தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். அவரது திரைப் பயணம், குறிப்பாக 2013-ஆம் ஆண்டு நடந்த சில சம்பவங்களால், பெரும் திருப்புமுனையைச் சந்தித்தது. மினு முனீர் மலையாள சினிமாவில் நடிகையாக பணியாற்றிய காலத்தில், "தே இங்கோட்டு நோக்கியே" மற்றும் "காலண்டர்" போன்ற படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், பாலியல் புகாரில் கேரள நடிகை மினு முனிர் சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த 14 வயது சிறுமியை சின்னத்திரையில் நடிக்க வைப்பதாக கூறி மினு முனீர் அழைத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சிறுமி தங்கிய இடத்தில் அவரிடம் நான்கு பேர் அத்துமீறியதாக புகார் எழுந்தது.
இதையும் படிங்க: 10 வயது சிறுமியை சீரழித்த கொடுமை... விஸ்வகர்மாவுக்கு போலீஸ் கஸ்டடி! கதறி கதறி அழுத கைதி!
இதன் பேரில் மினு முனீர் கேரளாவில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடம் சென்னை என்பதால் வழக்கு சென்னை திருமங்கலம் போலீஸாருக்கு மாற்றிவிடப்பட்டது. அதன் பேரில் நடிகை மினு முனீரை கைது செய்த சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கேரள நடிகை மினு முனீருக்கு சென்னை திருமங்கலம் மகளிர் போலீசார் நோட்டீஸ் கொடுத்தனர். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு கேரள நடிகையை விடுவித்துள்ளனர்.
10 ஆண்டுக்குப் பின் புகார் தரப்பட்ட நிலையில் சிறுமியாக இருந்த போது தங்க வைக்கப்பட்டு விடுதலை அவர் அடையாளம் காட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் அடைத்து வைக்கப்பட்டிருந்த விடுதியை அடையாளம் காண இளம் பெண் திணறுவதாக தெரிகிறது. இளம் பெண் ஹோட்டலை அடையாளம் காட்டிய பின்னர் விசாரணை தொடங்கும் என்பதால் கேரள நடிகை நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வெளிய போ கூடாது.. எதையும் சொல்ல கூடாது..! பெண் போலீஸ் மிரட்டுவதாக சிறுமியின் தந்தை புகார்..!