கனிம வளத்தடை..! அதிரடி காட்டிய தமிழக அரசு...! தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் கடிதம்..!!
கனிமவளத் தடை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் சதீஷன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் கட்டுமானப் பொருட்களான கல், M-சாண்ட் உள்ளிட்ட கனிமவளங்களை அண்டை மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு மூன்று மாத கால தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை தென் மாநிலங்களின் உள்கட்டமைப்பு திட்டங்களை பாதிக்கும் எனக் கருதும் கேரள முதலமைச்சர் வி.டி.சதீஷன், தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு உடனடியாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசின் இந்த உத்தரவு, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு செல்லும் கல் மற்றும் கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தை பாதிக்கிறது. கேரளாவில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் இதனால் தாமதமாகும் அபாயம் உள்ளது. இந்த தடை தென் மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கும் என சதீஷன் தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கேரளா தனித்தன்மை வாய்ந்த மாநிலம் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் தடைக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்யும் சமநிலை முறையை உருவாக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: உசுருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்கோம்... தலைமைச் செயலக ஊழியர்கள் முதலமைச்சர் விஜய்க்கு வேண்டுகோள்...!
இதன் மூலம் கேரளாவின் நடைபெறும் திட்டங்கள் தடையின்றி முன்னேற உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழக அரசின் இந்த தடை உத்தரவு, மாநிலத்தின் சொந்த உள்கட்டமைப்பு திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத சுரங்கப் பணிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அண்டை மாநிலங்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேரள முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இரு மாநிலங்களுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்த விவகாரம் விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் விஜய் இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பார் என கேரள தரப்பு நம்புகிறது. இந்த சம்பவம் தென் இந்திய மாநிலங்கள் இடையேயான ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் அதிருப்தி..! மத்திய அரசு நிலைப்பாட்டை எதிர்த்த முதல்வர் விஜய்..! பிரதமர் மோடிக்கு கடிதம்..!!