அபாண்டமா பொய் பேசாதீங்க..! தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டை மறுத்த கே.என் நேரு..!
தூய்மை பணியாளர்கள் யாரையும் பணியை விட்டு நீக்கவில்லை என அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பன்னிரண்டாவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடிவரும் தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு அடைப்பு விடுத்துள்ளது. தமிழக அரசின் அழைப்பை தூய்மை பணியாளர்கள் மறுத்துவிட்டனர்.
எங்கள் துறை அமைச்சரான கே என் நேரு எங்கே என்று தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பினர். அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: கவுன்சிலர்கள விட்டு மிரட்டுறாங்க! உயிரே போனாலும் சரி… போராட்டக் களத்தில் பரபரப்பு..!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அமைச்சர் நேரு சந்திக்காதது ஏன் என்றும் எப்போது வாக்குறுதி கொடுத்தோம் எனக் கேட்பவர்கள் எப்படி பணி பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும் கேட்டனர்.
தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய தூய்மை பணியாளர்கள் கவுன்சிலர்கள் தூய்மை பணியாளர்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டினர். மேலும் பணத்தாசை காட்டி போராட்டத்தை கலைக்கும் முயல்வதாகவும் குற்றம் சாட்டினர்.
உயிரே போனாலும் போராட்டத்தை கைவிட்டு செல்ல மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்த தூய்மை பணியாளர்கள், எல்லா கட்சி ஆதரவும் இருக்கிறது என்றும் ஆனால் ஏன் எங்களை ஏன் மிரட்டுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
அமைச்சர் கே.என் நேரு இதுவரை வரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் கே.என் நேரு, எந்த தூய்மை பணியாளரையும் பணியை விட்டு நீக்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் தூய்மை பணியாளர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். கடந்த நான்கு நாட்களாக தானே பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அவர் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: ராகுலுக்கு எத்தன தடவ சொல்றது? நீங்கலாச்சு பொறுப்பா நடந்துக்கங்க ஸ்டாலின்.. நயினார் விமர்சனம்..!