கவுன்சிலர்கள விட்டு மிரட்டுறாங்க! உயிரே போனாலும் சரி… போராட்டக் களத்தில் பரபரப்பு..!
போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்ற சென்னை மாநகராட்சியின் அழைப்பை தூய்மை பணியாளர்கள் மறுத்துவிட்டனர்.
குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
12 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. பணி பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இந்த நிலையில், தமிழக அரசின் அழைப்பை தூய்மை பணியாளர்கள் மறுத்துவிட்டனர். எங்கள் துறை அமைச்சரான கே என் நேரு எங்கே என்று தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: செத்து சாம்பல் ஆனாலும் தனிச்சு தான் போட்டி! யாரும் அசைக்க முடியாது... சீமான் திட்டவட்டம்
அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அமைச்சர் நேரு சந்திக்காதது ஏன் என்றும் எப்போது வாக்குறுதி கொடுத்தோம் எனக் கேட்பவர்கள் எப்படி பணி பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும் கேட்டுள்ளனர்.
தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய தூய்மை பணியாளர்கள் கவுன்சிலர்கள் தூய்மை பணியாளர்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பணத்தாசை காட்டி போராட்டத்தை கலைக்கும் முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
உயிரே போனாலும் போராட்டத்தை கைவிட்டு செல்ல மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள தூய்மை பணியாளர்கள், துப்பாக்கியால் தங்களை சுட்டு விடுவீர்களா., கைது செய்வீர்களா என்று கேட்டனர். எல்லா கட்சி ஆதரவும் இருக்கிறது என்றும் ஆனால் ஏன் எங்களை ஏன் மிரட்டுகிறீர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
நீங்கள் சொன்னவுடன் இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு போராடியதை விட்டுவிட்டு செல்வோமா என்றும் 15 வருட உழைப்பு எங்களை ஏன் தொல்லை செய்கிறீர்கள்., நாங்கள் போராடுவோம் என்று தெரிவித்தனர்.
எல்லாம் தெரிந்து கொண்டோம் தெரியாது போல் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட ஒரு நடிப்பதாகவும் கூறினர்.
இதையும் படிங்க: இறங்கி வந்த பாஜக... STRICT ஆக NO சொன்ன ஓபிஎஸ்! காரணம் என்ன சொன்னாரு தெரியுமா?