×
 

'கோச்சடையான்' தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கு, காசோலை மோசடி வழக்கில் 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

'மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட்' நிறுவனம் தயாரித்த 'கோச்சடையான்' பட வெளியீட்டிற்காக, 'ஆட் பியூரோ அட்வர்டைசிங்' நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் 5 கோடி ரூபாய்க்கான இரண்டு காசோலைகள் வழங்கப்பட்டன.

காசோலையை வங்கியில் செலுத்தியபோது, பணம் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு (Stop Payment) தயாரிப்பு நிறுவனம் வங்கிக்குக் கடிதம் அனுப்பியிருந்தது. இதனால் காசோலைகள் பணமின்றித் திரும்பின. இதையடுத்து, ஆட் பியூரோ நிறுவன உரிமையாளர் அபிர்சந்த் நஹர், தயாரிப்பாளர் முரளி மனோகர் மீது காசோலை மோசடி வழக்கைத் தாக்கல் செய்தார்.

முதலில் இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளம் நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்ததுடன், ₹7.70 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைச் சென்னை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது. கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து முரளி மனோகர் கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன் இன்று இறுதித் தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: குளுகுளுனு இருக்கப்போகுது சென்னை..!! பனிமூட்டம் தொடருமாம்..!! வானிலை அப்டேட்..!!

தயாரிப்பாளர் முரளி மனோகர் 2 கோடியே 52 லட்சம் ரூபாயை இன்னும் நான்கு வார காலத்திற்குள் புகார்தாரருக்கு வழங்க வேண்டும். ஒருவேளை இந்தத் தொகையை 4 வார காலத்திற்குள் செலுத்தத் தவறினால், அவர் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனதுத் தீர்ப்பில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.


 

இதையும் படிங்க: அரசு ஊழியர்களின் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share