31ஆம் தேதி வரை ஃப்ரீ என்ட்ரி..! கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!
கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் பிரபலமான மலைவாசஸ்தலங்களில் ஒன்று கொடைக்கானல். கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும் இடமாக இது விளங்குகிறது. 2026 மே மாத தொடக்கத்தில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு புதிய நுழைவுக் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது. QR குறியீடு மூலம் ஒரே இடத்தில் கட்டணம் வசூலிக்கும் இந்த முறைக்கு சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் போராட்டங்கள் ஏற்பட்டன.
இந்தச் சூழலில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்தது. அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, வனத்துறைக்கு உட்பட்ட முக்கிய இடங்களுக்கு இரண்டு நாட்கள் இலவச அனுமதி அளிக்கப்பட்டது. மே 2 மற்றும் மே 3 ஆகிய தேதிகளில் தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.
இந்த அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் சார்பில் வெளியிடப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவும், போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும், உள்ளூர் வாகன ஓட்டுநர்களின் கவலைகளைத் தீர்க்கவும் இந்த தற்காலிக நிவாரணம் வழங்கப்பட்டது. மே 4ஆம் தேதி முதல் வழக்கமான QR குறியீடு அடிப்படையிலான கட்டண முறை தொடர்ந்தது.
இதையும் படிங்க: ஒரே இடத்தில் ஒன்றுகூடி நிற்கும் வாடகை கார் ஓட்டுநர்கள்... 5 மணி நேரத்திற்கும் மேலாக கொடைக்கானலில் பரபரப்பு...!
இந்த நடவடிக்கை சுற்றுலாத் துறையின் வருமானத்தை பாதிக்காமல், உடனடி நெருக்கடியைத் தீர்க்க உதவியது. இந்த நிலையில், கொடைக்கானலில் இன்று முதல் 31ஆம் தேதி வரை வனத்துறைக்கு சொந்தமான இடங்களை இலவசமாக பார்வையிடலாம் என அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு முதல்வர் விஜயின் உத்தரவுப்படி வனத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!