×
 

காப்பாத்துங்க...! காப்பாத்துங்க...!! - ரத்தம் சொட்ட, சொட்ட காவல்நிலையத்திற்குள் தஞ்சம் புகுந்த நபரால் பரபரப்பு... பாஜக நிர்வாகியால் நேர்ந்த பயங்கரம்...!

 இச்சம்பவம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் காவல் நிலையத்தில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட தஞ்சம் அடைந்த நபரால் பரபரப்பு, சொத்து பிரச்சனையில் பாஜக நிர்வாகி தலையை உடைத்ததாக புகார் ...

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் இன்று சிவகாசியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் ரத்தம் சொட்ட சொட்ட தலையில்  காயத்துடன் காவல் நிலையத்திற்கு வந்திருந்தார், 

இதனால் பரபரப்பான சூழலில் அவரிடம் என்ன நடந்தது என்று  கேட்டபோது காவல் நிலையத்தில் தனது நிலம் சம்பந்தமாக தொடர்ந்து ஆறு முறை குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்ததாகவும், ஆனால் இது வரை எந்த ஒரு காவல் துறையும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று அவருடைய இடத்தில்  வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது கொடைக்கானல் 
குறிஞ்சி ஆண்டவர் கோயில் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி  பிரச்சினையில் தலையிட்டு தனது தலையில் தாக்கி கழுத்தில் அணிந்து இருந்த  செயினை பறித்து விட்டதாக காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளிக்க வந்தடைந்தார்.

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு... வெற்றிக்கு பாடுபடுவோம்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

  அதனை கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் 
மேலும் என்னுடைய உயிருக்கு தற்போது வரை எந்த பாதுகாப்பும் இல்லை என்றும் என்னுடைய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று சத்தம் சொட்ட சொட்ட நிலையில் 
 அங்கு இருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தினர்.

 

இதையும் படிங்க: மண் சுரண்டல்..! கொஞ்சம் கூட அக்கறை இல்லையா.? மத்திய அரசை விளாசிய வேல்முருகன்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share