இதுவரைக்கும் வரல... கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்...!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆஜராகாத 3 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கொடநாடு எஸ்டேட், மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் கோடைகால இல்லமாகவும், அவரது இரண்டாவது அலுவலகமாகவும் விளங்கிய இடம்.
2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கொடநாடு எஸ்டேட் பங்களாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைக்கப்பட்டன. சிசிடிவி கேமராக்கள் சில அகற்றப்பட்டன. 2017 ஏப்ரல் 23 இரவு நள்ளிரவுக்குப் பிறகு, 11 பேர் கொண்ட கும்பல் பங்களாவில் புகுந்தது. அங்கு பணியில் இருந்த பாதுகாவலர் ஒம் பகதூர் கொல்லப்பட்டார், மற்றொரு பாதுகாவலர் கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார்.
கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு 2022 ஆம் ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதுவரை இந்த வழக்கில் 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் உதகை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: முஸ்லிம்களும் சூர்ய நமஸ்காரம் செய்யலாம்! என்ன தப்பாகிற போகுது! ஆர்.எஸ்.எஸ்., பொது செயலர் பேச்சு!
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 2021-ல் வழக்கு மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. சசிகலா, அவரது உறவினர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், முன்னாள் போலீசார் உள்பட நூற்றுக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்த வழக்கின் விசாரணைக்காக நீண்ட காலமாக ஆஜராகாது 3 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபு, சதீஷன், சந்தோஷ் சாமி ஆகியோருக்கு பிடிவாரண்டு கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பதியில் உச்சக்கட்ட ஊழல்... ரூ.3000 கோடி அம்பேல்... ஏழுமலையான் சொத்தில் கைவைத்த சந்திரபாபு நாயுடு...!