ஏங்க... யூடியூப் வைரல் கூமாபட்டிக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
யூடியுப் வைரல் கூமாபட்டிக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில், வத்திராயிருப்பு வட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமமாக விளங்குகிறது கூமாபட்டி. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு பகுதியான இந்தக் கிராமம், வத்திராயிருப்பிலிருந்து மேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள கான்சாபுரம், நெடுங்குளம், மற்றும் செத்துநாராயணபுரம் போன்ற கிராமங்களுடன் இணைந்து, இப்பகுதி இயற்கையின் எழிலையும், கிராமிய வாழ்க்கையின் எளிமையையும் பறைசாற்றுகிறது.
கூமாபட்டி, சமீபகாலமாக சமூக ஊடகங்களால் பரவலாகப் பேசப்படும் ஒரு இடமாக மாறியிருக்கிறது. கூமாபட்டி மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதால், இயற்கையின் பசுமை நிறைந்த காட்சிகளால் சூழப்பட்ட ஒரு அமைதியான இடமாக விளங்குகிறது. இந்தக் கிராமத்தின் அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு அணை, இப்பகுதியின் இயற்கை அழகுக்கு மேலும் மெருகூட்டுகிறது. எளிமையான வாழ்க்கை முறையும், பாரம்பரியமான கலாச்சாரமும் இந்த ஊரின் அடையாளங்களாக உள்ளன.
ஆனால், இந்த ஊர் பரவலாக அறியப்படாத ஒரு மறைந்த முத்தாகவே இருந்தது, தங்கபாண்டி என்ற இளைஞன் தனது யூடியூப் பயணத்தை தொடங்கும் வரை. தங்கப்பாண்டி என்பவர் தனது ஊரான கூமாபட்டியின் அழகை விவரித்து வெளியிட்ட தனித்துவமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. ஏங்க… கூமாப்பட்டிக்கு வாங்க… என்ற வீடியோ வைரலாகியது. இதையடுத்து, ஏராளமானோர் கூமாபட்டிக்கு படையெடுத்தனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடிச்சு செத்தா ரூ.10 லட்சம்! இறந்து போன அரசு மருத்துவர் கண்ணுக்கு தெரியலையா? விளாசிய சீமான்..!
சமூகவலைதளம் மூலம் பிரபலமான பிளவக்கல் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்த நிலையில் விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறி இருந்தது. இந்த நிலையில், கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது.
இதையும் படிங்க: இனி நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை ‘ஜெய்சங்கர் சாலை’ என அழைக்கப்படும்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!