செங்கல்பட்டு TO கோவை... கைவரிசை காட்டிய சிறார்கள்...! தட்டித் தூக்கிய போலீஸ்..!!
செங்கல்பட்டு அரசினர் பாதுகாப்பு பள்ளியில் இருந்து தப்பிய ஓடிய சிறுவர்கள் கோவையிலும் கைவரிசை காட்டியது அம்பலமாகியுள்ளது.
செங்கல்பட்டு அரசினர் பாதுகாப்பு பள்ளியில் இருந்து தப்பி ஓடிய சிறார்கள் கோவையில் கைவரிசை காட்டி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து கேட்டின் பூட்டை உடைத்து ஆசிரியர்கள், வார்டன், காவலாளி மற்றும் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கி விட்டு இருசக்கர வாகனம், செல்போன், பணத்தை கொள்ளையடித்துவிட்டு 12 பேர் தப்பி சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து அவர்கள் கோவையிலும் சிறார்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அவர்களை சுற்றிவளைத்து கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர். அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து 12 பேர் தப்பிச் சென்ற விவகாரத்தில் 6 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர். மேலும், தப்பியோடிய சிறுவனை தொலைபேசி தேடி வருகின்றனர்.
இவர்கள் கோவையில் 2 பைக்கைகளைக் திருடியதும், இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பிய சிறார்களில் 3 பேர் கோவை இ
இதையும் படிங்க: காஞ்சிபுரம் அருகே 2 கிலோ உலோக அம்மன் சிலை பறிமுதல்! கட்டப்பையோடு சிக்கிய 3 பேர் கைது!
ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். 6 பேரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர். 4 பேர் 2 பைக்குகளை திருடிவிட்டு வரும் போது போலீசார் ரோந்து பணியில் சிக்கினர். அதில் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். தப்பியோட சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி கொடூரம் எதிரொலி..! வெடிக்கும் பிரச்சனை... போராட்டக்காரர்கள் கைது!