×
 

கோவை கொடூரம்..! மன்னிக்க முடியாத குற்றம்..! கொதித்த முதல்வர் விஜய்..!

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் விஜய் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு தமிழக அரசு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் என்றார். இது மன்னிக்க முடியாத குற்றம் என முதல்வர் விஜய் கூறி உள்ளார்.

கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என்றும் இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது எனவும் தெரிவித்தார். தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டு பிறப்பித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும் என்றும் இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதியளித்துள்ளார். 

 

இதையும் படிங்க: தலைமுடியால் கழுத்தை இறுக்கி கொலை..! வெறிநாய் குதறியது போல இருக்கு... உறவினர்கள் வேதனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share