×
 

கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

கோவை சிறுமி கொலை சம்பவத்தை தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஏழு நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.

சிறுமியின் உடர்கூறு ஆய்வு நடந்து வருகிறது. குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் தமிழகம் முழுவதும் ஒலித்து வருகிறது. இந்த நிலையில், கோவையில் சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஏழு நாட்களில் அறிக்கை அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி கொலை சம்பவம் பற்றி தாமாக முன் வந்து கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: தலைமுடியால் கழுத்தை இறுக்கி கொலை..! வெறிநாய் குதறியது போல இருக்கு... உறவினர்கள் வேதனை..!

தமிழக டிஜிபி அறிக்கை அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது சிறுமையின் குடும்பத்தினருக்கு தேவையான மனநல ஆலோசனைகளை வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது சிறுமி கொலை தொடர்பாக சட்டத்திற்கு உட்பட்டு கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: பாட்னா டு கோவை வந்த ரயிலில் கஞ்சா சாக்லெட்... தமிழகத்தில் வேலை காட்ட நினைத்த வடமாநிலத்தவர்கள் கைது...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share