மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பயங்கரம்; 16 வயது சிறுவன் கொலையில் வெளியான பகீர் காரணம்...!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே அதிகாலை இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
உலகப் பிரசித்திப் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு அருகே அருகிலேயே மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு அடுக்கு வாகன காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதுரையைச் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் அமைந்துள்ளது.
இந்நிலையில் அதிகாலை வாகன நிறுத்துமிடத்தின் முதல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை கொடூரமாக வெட்டி கீழே வீசிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.
அப்போது கொலை செய்யப்பட்டது 17 வயதான குப்பை என்கிற குபேந்திரன் என்பது தெரிய வந்தது. இந்த சிறுவன் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பழி வாங்கும் நோக்கத்துடன் யாராவது கொன்றார்களா? அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரணையை தீவிரப்படுத்தினர். தற்போது சந்தேகத்தின் பேரில் 5 பேரைக் கைது செய்த விளக்குத்தூண் போலீசார், கொலைக்கான காரணத்தை கண்டறிந்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ரத்தக்களறி... 17 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை... முதல் மாடியில் இருந்து தூக்கிவீசப்பட்ட பயங்கரம்...!
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சித்திரை திருவிழாவின் போது குபேந்திரன் என்ற குப்பை என்ற இளைஞருக்கும் முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் முத்து மணிக்கு பலமாக அடிப்பட்டது. இதனால் ஆத்திரத்தில் இருந்த முத்துமணி என்கிற தொத்தல் முத்துமணியின் தம்பி ராஜ் மற்றும் சதீஷ்குமார் என்கிற குட்டன் சதீஷ், ஹரி கிருஷ்ணன் என்கிற டிங்கிரி, முத்துக்குமார் ஆகிய ஐந்து பேர் கொண்ட கும்பல் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்து குபேரனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.
போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 5 பேரும் சிக்கியுள்ள நிலையில், குபேரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரையில் சோகம்... மண் சரிவில் சிக்கி துடிதுடித்து 2 பெண் தொழிலாளர்கள் மரணம்...!