மசாஜ் சென்டர் போர்வையில் படுஜோராக நடந்த பாலியல் தொழில்... தட்டித் தூக்கிய போலீஸ்..!
கோவில்பட்டியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் - இரண்டு பேர் கைது - மசாஜ் சென்டர் உரிமையாளருக்கு போலீசார் வலைவீச்சு - மூன்று பெண்கள் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் ஆயுர்வேதிக் வெல்னெஸ் மசாஜ் சென்டர் செயல் பட்டு வருகிறது.இந்த சென்டர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு பாலியல் தொழில் நடந்தது உறுதியானது.
இதையெடுத்து அங்கிருந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கதிரேசன் (59), மதுரை டிவிஎஸ் நகரை சேர்ந்த சூர்யா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் மசாஜ் சென்டரின் உரிமையாளர் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரேம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அங்கிருந்து பாதிக்கப்பட்ட மூன்று பெண்களை மீட்டு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஓடும் ஆட்டோவில் மாணவிக்கு பாலியல் தொல்லை... பிளேடை வைத்து கிழித்த பயங்கரம்!..
இதன் கிளைகள் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராஜபாளையம், உள்ளிட்ட பகுதியிலும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING: மதிமுகவில் இருந்து மல்லை சத்யா சஸ்பென்ட்! வைகோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு…