தமிழ்நாட்டுக்கே பெருமை... கிரேஸ் பானுவுக்கு கனிமொழி எம். பி. வாழ்த்து...!
திருநர் உரிமைகளுக்கான உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை குழு உறுப்பினராக சமூக செயல்பாட்டாளர் கிரேஸ் பானு தேர்வு செய்யப்பட்டதற்கு கனிமொழி எம்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருநர் உரிமைகளுக்கான உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை குழு உறுப்பினராக சமூக செயல்பாட்டாளர் கிரேஸ் பானு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் சமூக நீதி இயக்கங்களில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக, உச்ச நீதிமன்றம் 2025 அக்டோபர் 17 அன்று திருநங்கை மற்றும் பாலின பல்வகை உள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒரு சிறப்பு ஆலோசனை குழுவை அமைத்தது. இந்த ஆலோசனை குழு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஷா மேனான் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
குழுவின் உறுப்பினர்கள், திருநங்கை உரிமைகளுக்கான பிரபல செயல்பாட்டாளர்கள் மற்றும் நிபுணர்களை உள்ளடக்கியது. இந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சமூக செயல்பாட்டாளர் கிரேஸ் பானு தேர்வு செய்யப்பட்டிருப்பது, திருநங்கை சமூகத்தின் போராட்டங்களுக்கு ஒரு பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. இது வெறும் ஒரு நியமனமல்ல. அது பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வரும் பாகுபாட்டுக்கு எதிரான ஒரு சட்டரீதியான அடையாளமாகும். கிரேஸ் பானுவின் இந்தத் தேர்வு, திருநங்கை உரிமைகளின் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
திருநர் உரிமைகளுக்காக உச்சநீதிமன்றம் அமைத்திருக்கும் சிறப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கிரேஸ் பானுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முற்றும் வார்த்தை போர்... “கட்டிடம் சென்னையில்... கட்டளை டெல்லியில்” - இபிஎஸை வெளுத்து வாங்கிய கனிமொழி...!
கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்டவற்றில் திருநர் சமூக மக்களின் சமவாய்ப்பை உறுதிசெய்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திடவும் தொடர்ந்து அவர் களத்தில் செயல்பட்டு வருகிறார் என்றும் தெரிவித்தார். தற்போது பொறுப்பேற்றிருக்கும் இப்பணியும் சிறக்க வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு தான் எப்பவுமே பாதுகாப்பு! வட இந்தியர்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு...!