×
 

தமிழ்நாடு தான் எப்பவுமே பாதுகாப்பு! வட இந்தியர்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு...!

வட இந்தியர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் தெரிவித்தார்.

துறைமுகம் தொகுதி, சென்னை மாநகராட்சியின் 23 முதல் 30 வரையிலும், 43, 44, 48 மற்றும் 80 என்ற வார்டுகளையும் உள்ளடக்கியது. இதன் எல்லைகள் ராயபுரம், சேப்பாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர் போன்ற தொகுதிகளுடன் இணைந்துள்ளன. இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மை தமிழர்கள் என்றாலும், 1950களில் இருந்தே வட இந்தியர்களின் வருகை அதிகரித்து வருகிறது. சென்னை முழுவதும் ஹிந்தி பேசுபவர்கள் 1901ல் சில சிறு கூட்டமாக இருந்தவர்கள், இன்று லட்சக்கணக்கில் வளர்ச்சியடைந்துள்ளனர்.

துறைமுகம் போன்ற தொழில்துறை மையங்களில் அவர்கள் இயல்பாகத் திகழ்கின்றனர். 2025ல் திருவொற்றியூரின் மக்கள் தொகை சுமார் 3.62 லட்சமாகக் கணிக்கப்படுகிறது.அதில் வட இந்தியர்கள் கணிசமான பங்கைப் பெற்றுள்ளனர். பெரும்பாலும் பீகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், நேபாளம் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள்.

இதனிடையே, தீபாவளி திருநாளை முன்னிட்டு துறைமுகம் சட்டமன்ற தொகுதிகளில் வசிக்கும் 800 வடஇந்திய வாழ் குடும்பங்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பரிசு பொருட்கள் வழங்கினார். தொடர்ந்து இந்தி மொழியில் துறைமுகம் சட்டமன்ற தொகுதி வாள் வட இந்திய குடும்பங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 

இதையும் படிங்க: Wow... திருப்தியான பயணம்... முதலிடம் பிடித்த சென்னை மெட்ரோ...!

அப்போது பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வட இந்திய தொழிலாளர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று பெருமிதம் தெரிவித்தார். வரும் தேர்தலில் திமுகவிற்கு உங்களுடைய ஆதரவு வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

இதையும் படிங்க: கரூர் துயரச்சம்பவம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கியது தவெக...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share